சீனாவின் புதிய நீர்மூழ்கி கப்பல் மூழ்கியது: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்


வாஷிங்டன்: சீனாவின் புதிய அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் கட்டுமான பணியின்போது ஆற்றில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய கடற்படையை சீனா உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் சீனா அணுசக்தியால் இயங்கும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை புதிதாக கட்டி வந்தது. அந்த கப்பல் யாங்சோ ஆற்றில் கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமான பணியின்போது ஆற்றில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவின் முதல் ஸோ பிரிவு நீர்மூழ்கி கப்பலானாது மே அல்லது ஜூன் மாதத்தில் கடலில் மூழ்கி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இதற்கு ஆதாரமாக ஆற்றில் மூழ்கிய கப்பலை மீட்க கிரேன்கள் பயன்படுத்தப்பட்டதை காண்பிக்கும் செயற்கைகோள் படத்தை அமெரிக்கா வெளியிட்டது. இந்த படம் ஜூன் 15ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைகோள் படத்தில் அதே இடத்தில் கப்பல் ஒன்று நிற்பதை காட்டுகின்றது. இது ஏற்கனவே ஆற்றில் மூழ்கிய கப்பலா அல்லது புதிய கப்பலா என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட கப்பலில் அணுஎரிப்பொருள் நிரப்பப்பட்டு இருந்ததா என்பதும் தெளிவாக தெரியவில்லை. வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் இதுகுறித்த தகவல்கள் எதுவும் தங்களுக்கு தெரியாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்

சாலிகிராமத்தில் டேட்டிங் அப் மூலம் பாலியல் தொழில் நடத்திய அசாம் வாலிபர் கைது