சீனாவின் மின்சார திட்டத்தால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: அருணாச்சல் முதல்வர் அதிர்ச்சி தகவல்

இடாநகர்: சீனாவின் மெகா நீர் மின்சார திட்டத்தால் இந்தியா,வங்கதேச நாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அருணாச்சல் பிரதேச முதல்வர் அச்சம் தெரிவித்துள்ளார். அருணாச்சல் சட்ட பேரவையில் முதல்வர் பெமா காண்டு பதிலளிக்கையில்,‘‘ சீனாவில் இருந்து சியாங் ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றை அங்கு சாங்க்போ என அழைக்கிறார்கள்.

அருணாச்சலில் சியாங் என்றும் அசாமில் பிரம்மபுத்திரா என்றழைக்கப்படும் இந்த ஆற்றினால் கடும் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே 60 ஆயிரம் மெகாவாட் திறன் உடைய நீர் மின்சார நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா, வங்க தேசத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை தடுக்கும் வகையில் சியாங் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.

Related posts

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு