சீனாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் பலி; 4 பேர் மாயம்

பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில் இன்று(5 ஜூலை) காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 3-ம் தேதி முதல் பெய்த மழையால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் தென்மேற்கு சீனாவின் பெரிய பகுதிகளில் அதிகாரிகள் மழையால் ஏற்படும் பேரழிவுகளுக்கான எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறினார். அனைத்து மட்டங்களிலும் உள்ள முன்னணி அதிகாரிகள் வெள்ளத்தை எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் இருக்க வேண்டும், மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், மேலும் அனைத்து வகையான இழப்புகளையும் குறைக்க பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அண்டை நாடான சிச்சுவானில், இந்த மாதம் பெய்த கனமழையால் 460,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் மழையின் காரணமாக் சுமார் 85,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், இந்த வாரம் நாட்டின் “மலைப் பகுதிகளில் திடீர் வெள்ளம்” மற்றும் “சில பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!