நட்சத்திர ஓட்டல் பாரில் பெண்களிடம் சில்மிஷம்; முக்கிய குற்றவாளி குகன் கைது

* நண்பரை பார்க்க வந்த போது சிக்கினார்
* துப்பாக்கியுடன் வீடியோ பதிவு குறித்து விசாரணை

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹெக்டர் சாலமன் (24). இவர் தனது உறவினரான கார்த்திக்குமார், துனுதீன் ஆகியோருடன் கடந்த 30ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றின் பாருக்கு 2 பெண் தோழிகளுடன் சென்றுள்ளார். அதே பாருக்கு சூளைமேடு பகுதியை சேர்ந்த குகன், நண்பர்களான மாணிக்க விக்னேஷ், ஜெப்ரீஷ், அரவிந்த், பிரகாஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

அப்போது, மது அருந்திக் கொண்டிருந்த குகன், நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடி கொண்டிருந்த 2 பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து 2 பெண்களும் ஹெக்டர் சாலமன் மற்றும் கார்த்திக்குமாரிடம் கூறி உள்ளனர். உடனே இருவரும் குகனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதை கவனித்த பார் நிர்வாகம் ஹெக்டர் சாலமன் மற்றும் அவரது நண்பர்களை வெளியேறியுள்ளனர். அதன்படி பாரில் இருந்து வெளியே வந்து, குகன் தனது நண்பர்களுன் ஹெக்டர் சாலமன் மற்றும் கார்த்திக்குமார், துனுதீன் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அதோடு இல்லாமல் குகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹெக்டர் சாலமன், கார்த்திக்குமாரை சரமாரியாக குத்திவிட்டு நண்பர்களுடன் தப்பினார்.

இதில் படுகாயமடைந்த ஹெக்டர் சாலமன் மற்றும் கார்த்திக் குமாரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கார்த்திக்குமார் புகார் அளித்தார். போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குகன் நண்பர்களான மாணிக்க விக்னேஷ், ஜெப்ரீஷ், அரவிந்த், பிரகாஷ், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குகன் மட்டும் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில் நண்பர் ஒருவரை பார்க்க குகன் நுங்கம்பாக்கம் பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் செல்போன் உதவியுடன் குகனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குகனிடம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி மற்றும் வாளுடன் வீடியோ பதிவு செய்தது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குகன் பயன்படுத்திய துப்பாக்கி கள்ளச்சந்தையில் வாங்கப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு