சிலியில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… 13,000 பேர் வீடுகள் இழப்பு..!!

சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கான்செப்சியன் என்ற இடத்தில் கழுத்தளவு ஓடும் வெள்ளத்தில் சிக்கிய குதிரையை மீட்புப் படையினர் கயிறு கட்டி மீட்டனர். மேலும் நிக்குயின் என்ற இடத்திலும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்..!!

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடியின் புகைப்படங்கள்..!!

பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்