காணாமல் போகும் சிறுவர்களை மீட்க இணையதளம் விரைவில் துவக்கம்

புதுடெல்லி: காணாமல் போகும் சிறுவர்களை மீட்பதற்கான இணையதளத்தை ஒன்றிய அரசு விரைவில் துவக்க உள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ காணாமல் போகும் சிறுவர்களை மீட்பதற்கான இணையதளம் டிராக் சைல்டு,குழந்தைகள் தத்தெடுப்புக்கான கேரிங்ஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய இணையதளமாக உருவாக்கும் பணியை தேசிய தகவல் மையம்(என்ஐசி) மேற்கொண்டு வருகிறது. மிஷன் வாத்சால்யா என்ற பெயரிலான இந்த இணையதளம் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களை கண்காணிக்கும். இந்த மையங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகள் பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும். அதே போல் சிறார் பாதுகாப்பு மையங்களுக்கு வரும் சிறுவர்களின் விவரங்களும் அதில் சேர்க்கப்படும். இதன் மூலம் பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாக்கப்படுவதோடு, அவர்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு