கீழ்ப்பாக்கத்தில் இறந்த சிசுவின் சடலத்தை துணி சுற்றாமல் ஒப்படைத்த பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் !!

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கத்தில் இறந்த சிசுவின் சடலத்தை துணி சுற்றாமல் ஒப்படைத்த பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மசூத் எனபவர் மனைவி செளமியாவிற்கு கடந்த டிசம்பர் 5ம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை தாக்கத்தால் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் கிடைக்காத நிலையில், வெகு நேரம் போராடி புளியந்தோப்பில் உள்ள மருத்துவமனைக்கு கர்ப்பிணி செளமியாவை கொண்டு சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், பெரம்பூரில் உள்ள முத்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் முயற்சித்தபோது, ​​மருத்துவர்கள் முதலில் மறுத்துள்ளனர். ஆனால் இறுதியில் காவல்துறை தலையிட்ட பிறகு தாய்க்கு சிகிச்சை அளித்தனர். அப்போது, குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் (TMMK) தலையீட்டிற்குப் பிறகு, டிசம்பர் 10ம் தேதி குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தின் விதிமுறைகள்படி, துணி கூட சுற்றாமல் குழந்தையின் உடலை ஒரு அட்டைப் பெட்டியில் அடைத்து கொடுத்துள்ளனர். இந்த சூழலில்தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பிணவறை உதவியாளர் பன்னீர்செல்லம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிசு சடலம் ஒப்படைப்பில் அலட்சியம் என்ற புகாரை விசாரிக்க 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பிணவறை உதவியாளர் பன்னீர்செல்லம் பணி இடைநீக்கத்தில் இருப்பார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!