மோடி ரோடு ஷோவில் குழந்தைகள்: விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி!


கோவை: கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கான தேர்தல் முதல் 2 கட்டத்தில் முடிகிறது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களை சுற்றி சுற்றி வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்து உள்ளார் பிரதமர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் ரோடு ஷோவில் நேற்று பங்கேற்றார்.

பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து நேற்று பங்கேற்றிருந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி எழுந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியான நிலையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை அலுவலர், தொழிலாலர் துறை இணை ஆணையரிடம் ஆட்சியர் அறிக்கை கேட்டுள்ளார். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!