குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி பொதுமக்கள் பாராட்டு

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் கிராம காவல், கல்வியும் காவலும் போன்ற திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. இத்திட்டத்தின் கீழ், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் எவரேனும் இருக்கின்றனரா என்று ஆய்வு செய்யுமாறு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜென்னட்ஜெசிந்தா மற்றும் எஸ்எஸ்ஐ மருதமுத்து ஆகியோருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நக்கசேலம் கிராமத்தில் போலீசார் ஆய்வு செய்ததில் 11 வயது உள்ள சிறுவன் ஒருவன் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மேலும் கல்வியை தொடர முடியாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொழிலாளர்கள் ஒழிப்பு தினமான இன்று எஸ்பி.ஷ்யாம்ளா தேவி நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுவனை ஆறாம் வகுப்பில் சேர்த்தார். பின்னர் அந்த சிறுவனை எஸ்பி. வகுப்பறையில் அமர வைத்து வருங்காலத்தில் அரசு அதிகாரியாக வருமாறு வாழ்த்தினார். மேலும் சிறுவனின் தாயிடம் படிப்பு தேவையான உதவிக்கு தன்னை அழைக்குமாறு செல்போன் எண்ணையும் அளித்தார். இது குறித்து எஸ்பி.ஷ்யாம்ளா தேவி கூறுகையில் கல்வி யாராலும் அழிக்க முடியாத சொத்து. படிப்பு மட்டும் தான் வாழ்கை உயர்த்தும். மாணவர்கள் நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு செல்ல வேண்டும். இதுபோன்று பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த எஸ்பி.ஷ்யாம்ளா தேவிக்கு பொதுக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகிறது.

Related posts

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை? ஐகோர்ட் கேள்வி

சாமியார் போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு.. ஜென் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கிலும் தொடர்பு

தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா