சிக்கன்குனியா காய்ச்சல் 331 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் சிக்கன்குனியா காய்ச்சலால் 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சிக்கன்குனியா காய்ச்சல் பரவல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,451 பேர் சிக்கன்குனியா அறிகுறி இருந்துள்ளது. அதில் 331 பேருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு அதிக பாதிப்பு இருப்பினும் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் அச்சப்பட தேவை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்