முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி; ஈஞ்சம்பாக்கத்தில் படகு போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

துரைப்பாக்கம்: சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194வது வட்ட திமுக சார்பில், கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 194 (அ)வட்ட செயலாளர் குங்ஃபூ மாஸ்டர் எஸ்.கர்ணா, வார்டு கவுன்சிலர் கே.விமலா கர்ணா ஏற்பாட்டில் ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 200 பள்ளி, மாணவ, மாணவி களுக்கு தலா 3000 கல்வி ஊக்கத்தொகை, 1300 பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, 31 சாலை வியாபாரிகளுக்கு நிழற்குடை மற்றும் 15 ஏழை பெண்களுக்கு தையல் மெஷின், 10சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, 1544 மகளிருக்கு புடவைகள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை, கனடா போன்ற பல்வேறு நாடுகளிலும் காலை உணவு திட்டம் மிக பெரிய பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

ஈஞ்சம்பாக்கம் தனியார் ஹோட்டல் அருகே மற்றும் எதிரே மாநகர பேருந்து நிற்பதில்லை எனவும் காலை மாலை என இரண்டு வேளைகளில் பிராட்வே, கோவளம் செல்வதற்கு மகளிருக்கான இலவச பேருந்து கூடுதலாக இரண்டு நடைகள் இயக்க வேண்டும் என வட்ட செயலாளர், கவுன்சிலர் விமலா கர்ணா கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து துறையின் மேலாண்மை இயக்குனரை அலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன். இன்று முதல் இங்கு பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி செல்லவும் பிராட்வே, கோவளத்துக்கு செல்ல காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக இரண்டு நடைகள் மகளிருக்கான இலவச பேருந்துகள் இயக்கப்படும். வருகிற 2025ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு ஈஞ்சம்பாக்கத்தில் மாநில அளவிலான படகு போட்டி நடைபெறும். முதல் பரிசு 5 லட்சம், 2ம் பரிசு 3 லட்சம், 3ம் பரிசு 2 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.நிகழ்ச்சியில் எஸ்.அரவிந்த ரமேஷ் எம்எல்ஏ, பகுதி செயலாளர் மதியழகன், பாலவாக்கம் சோமு, அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு