மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

 

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து. காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையே சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒன்றிய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையே சற்று நேரத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர். கே.சி. வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார்.

திமுக சார்பில் டி.ஆர்.பாலு, பொன்முடி, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பின்னர், மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து. காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

chiefministermkstalin-signature-dmk-congress-loksabhaelections

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்