சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிபெற்றார் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்க கோரி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமரை நேற்று சந்தித்து விட்டு, ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம், இரவு 7.10 மணிக்கு சென்னை திரும்பினார். சென்னை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்றுமுன்தினம் மாலை விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை பழைய விமான நிலையம் கேட் எண் 6, பகுதிக்கு வந்து நேரில் சந்தித்து, வரவேற்றார். பிறகு அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார். இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள விஐபிக்கள் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சிறிது நேரம் அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜியுடன் பேசிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் ஏறி இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்பு அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது