மிக்ஜாம் புயல் நிலவரம் குறித்து கலெக்டர்களிடம் தொலைபேசியில் முதல்வர் பேச்சு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தல்

சென்னை: வங்கக்கடலில் நிலவியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் தொடர்பாக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தங்களின் பகுதிகளில் இருந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று அதிகாலை 6 மணியில் இருந்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மிக்ஜாம் புயல் மற்றும் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவும் அறிவுறுத்தினார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர் உள்பட கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களின் கலெக்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டத்தில் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தற்காலிக தங்கும் இடங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்கு தடையின்றி உடனடியாக வழங்கிடவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!