முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா பயிர்களுக்காக 6,000 கனஅடி நீர் திறப்பு

சேலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்காக 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு TMC தண்ணீரை இன்று முதல் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்காக 6,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 600 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது.

Related posts

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது