முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மார்ச் 1 முதல் 25ம்தேதி வரை தொடர் பொதுக்கூட்டங்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மார்ச் 1ம்தேதி முதல் 25ம்தேதி வரை மாவட்டம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள், கீழ்க்கண்ட தேதிகளில், இடங்களில் நடக்கிறது. அதன்படி அடுத்த மாதம் 1ம்தேதி காலை 9 மணியளவில் மாவட்டம் முழுவதும் அனைத்து கிளையிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கும் விழா நடைபெற உள்ளது. பகல் 12 மணியளவில் மாவட்டத்தில் உள்ள 37 ஆதரவற்றோர் இல்லங்களில் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது.

12.30 மணியளவில் காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பரனூரில் தொழுநோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கப்படுகிறது. மார்ச் 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடக்கிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் காலை 10 மணியளவில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், பல்லாவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் பகல் 12 மணியளவில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், 12 மணியளவில் திருப்போரூர் அரசு பொதுமருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், 1 மணியளவில் குன்றத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்பட உள்ளது.

2ம்தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ள தொடர் பொதுக்கூட்டங்கள் மற்றும் அந்தந்த ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் கூட்டம் நடைபெறும் விவரம் வருமாறு: 2ம்தேதி திண்டுக்கல் ஐ.லியோனி – பல்லாவரம் வடக்கு பகுதி, 3ம்தேதி கம்பம் செல்வேந்திரன், கந்திலி கரிகாலன் – செங்கல்பட்டு நகரம், 4ம்தேதி நாஞ்சில் சம்பத், செங்கை தாமஸ் – ஆலந்தூர் தெற்கு பகுதி. 5ம்தேதி சுபவீரபாண்டியன், வெ.அன்புவாணன் – குன்றத்தூர் தெற்கு ஒன்றியம். 6ம்தேதி புதுக்கோட்டை விஜயா, ஆரணி மாலா – ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியம். 7ம்தேதி கோவி.செழியன், ஆலந்தூர் மலர்மன்னன் – பம்மல் தெற்கு பகுதி.

8ம்தேதி நெல்லிக்குப்பம் புகழேந்தி, சேப்பாக்கம் பிரபாகரன் – திருப்போரூர் தெற்கு ஒன்றியம். 9ம்தேதி சபாபதி மோகன், ஆலந்தூர் ஒப்பிலா மணி – செம்பாக்கம் வடக்கு பகுதி. 10ம்தேதி ஈரோடு இறைவன், தக்கோலம் தேவபாலன், செம்பாக்கம் தெற்கு பகுதி. 11ம்தேதி சைதை சாதிக், சென்னை அரங்கநாதன்- மறைமலைநகர் நகரம், 12ம்தேதி தமிழன் பிரசன்னா, செங்கை சந்தானம் – பல்லாவரம் தெற்கு பகுதி. 13ம்தேதி ராஜீவ்காந்தி, பரிதி இளம் சுருதி – ஆலந்தூர் வடக்கு பகுதி. 14ம்தேதி மதிவதனி, கவிஞர் நன்மாறன் – குன்றத்தூர் வடக்கு ஒன்றியம்.

15ம்தேதி குத்தாலம் கல்யாணம், போடி காமராஜ் – திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் – பேரூர். 16ம்தேதி கரூர் முரளி, பென்னேரி சிவா – காட்டாங் கொளத்தூர் தெற்கு ஒன்றியம். 17ம்தேதி சேலம் சுஜாதா, நாகம்மை கருப்பையா – தாம்பரம் கிழக்கு பகுதி. 18ம்தேதி காரமடை நாகநந்தினி, குடியாத்தம் புவியரசி – கண்டோன்மெண்ட் நகரம். 19ம்தேதி கவிஞர் தமிழ்தாசன், தமிழ்சாதிக் – பம்மல் வடக்கு பகுதி. 20ம்தேதி சைதை சாதிக், எழும்பூர் கோபி – குன்றத்தூர் நகரம். 21ம்தேதி ஈரோடு இறைவன், அத்திப்பட்டு சாம்ராஜ்-ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியம். 22ம்தேதி ராஜிவ்காந்தி, முரசொலி மூர்த்தி – மாங்காடு நகரம்.

23ம்தேதி தமிழன் பிரசன்னா, திருவொற்றியூர் கருணாநிதி – காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம். 24ம்தேதி கான்ஸ்டைன் ரவீந்திரன், தாம்பரம் ஜின்னா – ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம் – பேரூர். 25ம்தேதி கோ.வி.செழியன், வண்ணை புகாரி – புனித தோமையார் மலை வடக்கு ஒன்றியம். எனவே, அந்தந்த பகுதி – ஒன்றிய நகர பேரூர் திமுக செயலாளர்கள், மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் தொடர் பொதுக்கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து, கூட்டத்திற்கான அழைப்பிதழை முறையாக அச்சிட்டு அந்தந்த ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் அடங்கிய திமுக நிர்வாகிகளிடம் தந்து, கூட்டத்தில் பங்கேற்க செய்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி 7 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

தமிழ்நாட்டில் தொடர் தோல்விக்கு பிறகும் பாஜ அரசு இன்னும் பாடம் கற்கவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு