என் மீது அன்பு செலுத்தும் முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: புழல் சிறையில் இருந்து ஜாமினில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலையானார். 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. பிணை உத்தரவாதங்களை ஏற்று செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது; ” என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய் வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன்” என பேட்டியளித்தார்.

Related posts

ஹெல்மெட் அணியாமல் வந்ததை தட்டிக்கேட்ட போக்குவரத்து காவலருக்கு மிரட்டல்: டாஸ்மாக் சூபர்வைசர் கைது

குட்கா, கூல் லிப் விற்பனையை தடுக்க பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை: 9 பேர் கைது: குட்கா, கஞ்சா பறிமுதல்

சைபர் அரெஸ்ட் சட்டத்தில் கைது செய்ததாக கூறி ரூ.1.15 கோடி நூதன மோசடி : 3 பேர் கைது