லாலு பிரசாத் யாதவ் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: லாலு பிரசாத் யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:
ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள், செயல்படுத்திய புரட்சிகரத் திட்டங்கள் மற்றும் உறுதிகுலையாமல் மதச்சார்பின்மையை உயர்த்தி பிடித்தது ஆகியவை ஒரு நியாயமான, சமநிலை சமுதாயத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன. உங்களது வாழ்க்கைப் பணி எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக அமைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related posts

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது

அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

நான் முதல்வன் திட்டம்: பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்