முதல்வர் மனைவி எம்எல்ஏ பதவி திடீர் ராஜினாமா: சிக்கிம் அரசியலில் பரபரப்பு

காங்டாக்: மக்களவை தேர்தலுடன் சிக்கிம் சட்டபேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா(எஸ்கேஎம்) கட்சி 2வது முறையாக வெற்றி பெற்றது.மொத்தம் உள்ள 32 இடங்களில் எஸ்கேஎம் கட்சி 31 இடங்களை கைப்பற்றியது. தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக பிரேம் சிங் தமாங் மீண்டும் பதவியேற்றார்.

அவருடன் 11 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், பிரேம் சிங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் திடீரென ராஜினாமா செய்ததற்கான காரணம் தெரியவில்லை. எம்எல்ஏவாக பதவி ஏற்ற ஒரு நாளுக்கு பின் முதல்வர் மனைவி ராஜினாமா செய்தது சிக்கிம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை