முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்..

டெல்லி :சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து எம்.பி.,க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம் உட்பட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை