இந்தியா என்பதை பாரதிய என மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: இந்தியா என்பதை பாரதிய என மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய குற்றவியல் சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரதிய என மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சியங்கள் என பெயர் மாற்றம் செய்வது மொழி ஏகாதிபத்தியத்தை காட்டுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை என்ற அடித்தளத்துக்கு விரோதமானது ஒன்றிய பாஜக அரசின் செயல் என்று தெரிவித்துள்ளார். இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் பாஜகவின் செயலை வீழ்த்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வானபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் இன்றும், நாளை மறுநாளும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்