காஞ்சிபுரத்தில் 10,000 மகளிருக்கு இன்று முதல்வர் வழங்குகிறார்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துவக்க விழாவில், இன்று 10 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகையை முதல்வர் வழங்குகிறார். தேர்தலின்போது திமுக சார்பில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் அவர் பிறந்த தினமான செப்.15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. மகளிர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடக்கி வைக்க இருக்கிறார்.

தமிழக முதல்வர் உளுந்தை கிராமத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ராஜகுளம்,பொன்னேரிகரை ஆகிய இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பாகவுள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இதனையடுத்து, அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிடுகிறார்.

பின்னர், அங்குள்ள அவரது உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதன் பின்னரே விழா மேடைக்கு வந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடக்கி வைக்கிறார். விழாவிற்கு வரும் மகளிருக்கும், பொதுமக்களுக்கும் காலை உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கார்களை நிறுத்த வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் நலத் திட்டங்கள் குறித்த கையேடு ஒன்றும் விழாவிற்கு வரும் அனைத்து மகளிருக்கும் இலவசமாக வழங்கப்படவும் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்