முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்றார் மாற்றுத்திறனாளி மாணவன்

திருவொற்றியூர்: முதலமைச்சர் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனை அமைச்சர் காந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். எண்ணூர் காமராஜ் நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி அயாத்பாஷா. இவரது மனைவி சரிபா. இவர்களது மகன் அப்பாஸ், எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பாஸ் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. ஆனாலும் மற்ற மாணவர்களைப் போல் அப்பாஸ் விளையாட்டிலும், படிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விளையாட்டில் சாதனை புரிய வேண்டும் என்ற உறுதியோடு, பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் பல்வேறு போட்டியில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி திருவள்ளூரில் நடந்தது. இதில் பங்கேற்ற அப்பாஸ் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்பாசுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கமலா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகின்றனர். எனவே தேசிய, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று அவன் தங்கம் வெல்வான் என்று அவரது பெற்றோர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்