முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்யுங்கள்: கூட்டணி கட்சி கூட்டத்தில் உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

மும்பை: உத்தவ் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் மூன்றுமே பெரிய கட்சிகள் என்பதனால் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே,‘ மகா விகாஸ் அகாடிக்கான முதல்வர் வேட்பாளரை முதலில் தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அறிவிக்கும் எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியினரும் தங்களது சுயநலத்தை விட்டுவிட்டு பொதுநலன் காக்க போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை