தலைமையாசிரியர் மீது அடுக்கடுக்காக வந்த புகார் காஞ்சி அந்திரசன் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அந்திரசன் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மீது அடுக்கடுக்காக வந்த புகாரின்பேரில், எழிலரசன் எம்எல்ஏ ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காஞ்சிபுரத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் பள்ளி சுவற்றைத்தாண்டி வருவதும், சாலைகளில் சுற்றி திரிவதும் என பல்வேறு ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்த காட்சிகளும் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒழுங்கினமாக நடந்து கொண்டதால் கோபமடைந்து மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை மனரீதியாக சித்திரவதை செய்வதாகவும், மாணவர்களிடம் தொட்டதுக்கெல்லாம் அபராதம் விதித்து அபாண்ட அபராதம் விதித்து கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்திரசன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குளோரி சாந்தகுமாரி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து நேற்று முன்தினம் மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனுவுடன் வந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து, பள்ளியில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொள்ளலாம் என தெரிவித்ததின்பேரில் மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து, அந்திரசன் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற எம்எல்ஏ எழிலரசன், பள்ளி மாணவர்களிடையே உரையாடினார். தகவலறிந்து வந்த நிருபர்கள் யாரையும், பள்ளி நிர்வாகம் அனுமதிக்காமல் நுழைவாயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். பலமுறை முயற்சித்தும் நிருபர்கள், செய்தி சேகரிக்க முடியாமல் இருந்த நிலையில் இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில்களும் வரவில்லை. இந்நிலையில் மாணவர்களிடையே உரையாடிய எம்எல்ஏ எழிலரசன், மாணவர்களின் கல்வி தடை இல்லாமல் கற்கும் வகையில் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இன்னும் ஓரிருநாளில் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 100 ரூபாய் பெற உள்ளதாகவும், இதன்மூலம் உயர்கல்வி கற்று சிறப்படைய வேண்டிய நிலையில் ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் வலைதளங்களில் பரவி வருவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எந்த குறைகள் இருந்தாலும் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கவில்லை என்ற கோரிக்கை விசாரித்து விரைவில் புத்தகம் வழங்க ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பல்வேறு ஒழுங்கினை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், பள்ளி மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறையும் பெற்றோருக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு