முதலமைச்சரின் இணைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதி நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். இன்று காலை நியமிக்கப்பட்டார். பணி நியமனம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தலைமைச் செயலகம் வந்த அவர் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து முதல்வரின் இணைச் செயலர் நியமனம், தூக்துக்குடி ஆட்சியர் மாற்றம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சரின் இணைச் செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டார்.

Related posts

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன