முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் ஆந்திர மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது

*பாஜக மாநில தலைவர் பேச்சு

திருமலை : முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சியில் ஆந்திர மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது என பாஜக மாநில தலைவர் புரந்தரிஸ்வரி பேசினார். ஆந்திர மாநில பாஜக தலைவர் டக்குபதி புரந்தரிஸ்வரி தலைமையில் விஜயவாடாவில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் தேர்தல் வெற்றி குறித்து நிர்வாகிகளுக்கு வேட்பாளர் அறிமுகவிழா நேற்று நடந்தது. விழாவில், பல்வேறு துறைகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்தனர்.

அவர்களுக்கு கட்சி கட்சி சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மாநில பாஜக தலைவர் புரந்தேரேஸ்வரி பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் தற்போதுள்ள அரசை வீழ்த்த பாஜக, ஜனசேனா, தெலுங்கு தேசம் என மூன்று கட்சிகளும் இணைவது வரலாற்று அவசியம்.ஆந்திராவில் அராஜக ஆட்சியை அகற்ற கட்சித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். கூட்டணியால் கட்சியில் உள்ள பலர் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், மாநிலத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அரசால் அதிக அளவில் கடன் சுமையாக மாநிலத்திற்கு ஏற்படுத்தி உள்ளது. செயலகம், மதுபானம், சுரங்கங்கள், அரசு கட்டிடங்கள், நிலங்கள் அடமானம் என பலவற்றை அடமான வைத்துள்ளனர். அரசு சொத்துக்களை அடமானம் வைக்க இந்த அரசுக்கு எங்கே அதிகாரம் இருக்கிறது? பெண்களின் தாலியை அறுக்கும் தரம் இல்லாத மலிவு விலை மதுபானம் அதிக விலைக்கு மாநிலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

முதல்வர் ஜெகன் மோகன் எனது எஸ்சி, என் எஸ்டி, என் பிசி எனக்கூறும் அந்த சமூகங்களுக்கு அவர் என்ன நியாயம் செய்தார்? எஸ்சி, பிசி, எஸ்டி நிதிகள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எஸ்சி இளைஞரை கொன்ற எம்எல்சியை தன் அருகில் உட்கார வைத்துள்ளார். எஸ்சிகளுக்கு ஜெகன் மோகன் செய்த நீதி இதுதானா? ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

ஜெகன் மோகனின் கொடுங்கோல் ஆட்சியை பார்த்து வருகிறோம். முதல்வரை பதவி நீக்கம் செய்ய திரிவேணி சங்கம் போன்று இந்த கூட்டணி தவிர்க்க முடியாதது. பாஜக வேட்பாளர்கள் மட்டுமின்றி, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மூன்று கட்சிகளின் கொடிகள் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரின் நோக்கம் ஒன்றுதான், மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் ஆந்திராவில் ராமராஜ்யம் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி