அகில இந்திய தேர்வுகளை ஒன்றிய அரசே தான் நடத்த வேண்டுமா? என ப. சிதம்பரம் கேள்வி : தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவும் வலியுறுத்தல்

டெல்லி : அகில இந்திய அளவில் தேர்வுகளை நடத்துவதை ஒன்றிய அரசு கைவிட்டு அந்த பொறுப்பை மாநிலங்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பசிதம்பரம், நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் அரங்கேறி வருவதை சுட்டிக் காட்டி உள்ளார். இவ்வளவு பெரிய நாட்டில் நடத்தப்படும் நீட் போன்ற தேசிய தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிக் அதிகம் என்று அவர் கூறியுள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகளை மட்டுமே ஒன்றிய அரசு நடத்தலாம் என்று யோசனை கூறியுள்ள அவர், கல்லூரிகளுக்கான தேர்வுகளையும் ஒன்றிய அரசே நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் நீட் தேர்வை தாங்களே நடத்தி கொள்வதற்கான அதிகாரத்திற்காக மாநிலங்கள் போராட தொடங்கி உள்ளன என்றும் ப. சிதம்பரம் சுட்டி காட்டி உள்ளன. நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கான ஒன்றிய நிர்வாகத்தை கடுமையாக சாடி உள்ள ப.சிதம்பரம், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ராஜினமா செய்வதற்கு பதிலாக நீட் தேர்வு முறையை நீக்குவதற்கான பரிந்துரையை பிரதமர் மோடிக்கு தர்மேந்திர பிரதான் அளித்தால் தமக்கு மகிழ்ச்சி தான் என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பலாத்காரம், மிரட்டல் புகார் மூலம் பல பொய்யான எப்ஐஆர்; 10 பேரை திருமணம் செய்த ‘தில்லாலங்கடி’ பெண்ணுக்கு குட்டு: போலீசுக்கு கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம்..!!

ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்