சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்: நடராஜர், சிவகாமசுந்தரி ஆனந்த நடனத்தை காண குவிந்த பக்தர்கள்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவை கடந்த 3 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடந்தது.

பூலோக கயிலாயம் என அழைக்கப்படும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டபடியே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேரில் பக்தர்கள், சிவனடியார்கள் சிவவாத்தியம் முழக்கியபடி சென்றனர். பெண்கள் தெருக்களில் கோலமிட்டு வரவேற்றனர். மாணவிகள் பரதநாட்டியம் ஆடி நடராஜர் தேரை வரவேற்றது பரவசத்தை ஏற்படுத்தியது.

தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் வைக்கப்பட்டது. சிதம்பரம் கீழவீதியில் துவங்கி 4 மாட வீதிகளையும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நான்கு வீதிகளையும் தேர் வலம் வந்த பிறகு இரவு நிலைக்கு வரும். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது.நாளை பல்வேறு ஆராதனை, அர்ச்சனைகள் நடைபெற்ற பிறகு மதியம் சுமார் ஒரு மணி அளவில் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறும்.

அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக ஆனந்த நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இந்த திருவிழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியுள்ளனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு