சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை மீட்க உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு மற்றும் காரைக்காலில் சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமாக உள்ளன. நிலங்களை பொது தீட்சிதர்கள் பராமரிக்கவில்லை என்பதால், அவற்றை பாதுகாக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தேன். முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்த புகார், கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆட்சியர் விசாரணை கூட்டம் கூட்டியபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்