சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக தீட்சிதர் சங்கர், அவரது உதவியாளர் நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட போலிச் சான்றிதழ்கள், ஜெராக்ஸ் இயந்திரம், மடிக்கணினி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலை., அண்ணாமலை பல்கலை., கேரளா, கர்நாடகா பல்கலைக்கழகங்களின் பெயர்களில் போலிச் சான்றிதழ்கள் தயாரித்ததாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் ஏற்கெனவே சங்கர், நாகப்பன் என இருவர் கைது செய்யப்பட்டனர்; கேரளா மற்றும் கர்நாடக பல்கலைக்கழகங்களின் போலிச் சான்றிதழ்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

Related posts

இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

புதிய குற்றவியல் சட்டங்கள் – நீதிமன்ற புறக்கணிப்பு

இன்று ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு