சந்தேகமே வேண்டாம்… சிதம்பரத்தில் நான்தான் போட்டியிடுவேன்…: திருமாவளவன் ‘பளீச்’

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் அளித்த பேட்டி:
தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம். சுமூகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும். நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொது தொகுதி. ஆனால் எட்டு கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். பாஜவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும், அதிமுகவை பாஜ விடுவதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘இது என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். இந்த தொகுதியில் தான் போட்டியிட முடியும். தென்மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் மூன்று தொகுதிகளிலும், ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியிலும், மற்ற மாநிலங்களில் இந்திய கூட்டணியில் போட்டியிட முயற்சித்து வருகிறோம்,’ என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு