சிதம்பரம் அருகே இன்று அதிகாலை வீட்டில் புகுந்த 8 அடி நீள முதலையால் பரபரப்பு: வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் பகுதியில் ஒரு வீட்டில் இன்று அதிகாலை பதுங்கியிருந்த முதலையை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வக்கரமாரி நீர்த்தேக்கத்தில் விட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஷீத். நேற்றிரவு தனது வீட்டில் படுத்து தூங்கிய இவர் இன்று அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டு முன் பகுதியில் பெரிய முதலை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் சத்தம் போட்டதும் ஊர் மக்கள் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்தனர். உடனடியாக அப்துல்ரஷீத் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு சென்ற வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் முதலையை பத்திரமாக மீட்டனர்.

அந்த முதலை 8 அடி நீளமும், 110 கிலோ எடையும் இருந்தது. பின்னர் வனத்துறையினர் வக்கரமாரி ஏரியில் முதலையை பாதுகாப்பாக எடுத்து சென்று விட்டனர். அதிகாலையில் வீட்டுக்குள் முதலை புகுந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது