சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பணம் கேட்ட தீட்சிதர்கள்: போலீசில் பெண் பக்தர் அளித்த புகாரால் பரபரப்பு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் தீட்சிதர்கள் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் நகரை சேர்ந்த ஜெயசீலா என்பவர் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் சார்பில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற வேறு சில பக்தர்களிடம் கோயில் தீட்சிதர்கள் பணம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்ற ஜெயசீலா, கோயிலில் நடந்த சம்பவங்கள் குறித்தும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீசில் புகார் அளித்தார். இதேபோல ஏற்கனவே தீட்சிதர்கள் மீது ஜெயசீலா போலீசில் புகார் அளித்து அதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்