சிக்கன் மோமோஸ்

தேவையான பொருட்கள்

மாவு தயார் செய்ய
மைதா – 1 கப்
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பில்லிங் செய்ய
சிக்கன் கீமா – 300 கிராம்
வால்நட் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2 சிறிதளவு
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
வெங்காயத்தாள் வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை – 1/4 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில், மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்பு தண்ணீர் ஊற்றி பரோட்டா மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், அதில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும். இப்போது, கடாய்யில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வால்நட், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்கவும். இதைத் தொடர்ந்து, சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்த மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தில் போல மெல்லிசாக தேய்த்து கொள்ளவும். மாவின் நடுவில் சிக்கன் சேர்மத்தை வைத்து மாவின் முனைகளை மடிக்கவும். அடுத்து, மூங்கில் ஸ்டிமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோஸை வைத்து மூடி 15 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான சிக்கன் மோமோஸ் தயார். ஸ்டீமர் இல்லையெனில், இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கலாம்.

Related posts

தர்பூசணி தோல் துவையல்

உளுத்தம் பருப்பு துவையல்

பீட்ரூட் குழம்பு