உலகின் டாப் 10 சிக்கன் பட்டியலில் 3 இடங்களை பிடித்த இந்திய ‘சிக்கன்’

மும்பை: உலகின் சிறந்த சிக்கன் உணவுகள் பட்டியலை ‘டேஸ்டி அட்லஸ்’ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டாப் 50 சிக்கன் உணவுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் மூன்று சிக்கன் உணவுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் பட்டர் சிக்கன் நான்காவது இடத்திலும், சிக்கன் டிக்கா ஆறாவது இடத்திலும், சிக்கன் 65 பத்தாம் இடத்திலும், தந்தூரி சிக்கன் 18வது இடத்திலும் உள்ளது.

கொரிய ஃபிரைடு சிக்கன் முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் மூன்று உணவுகள் மெக்சிகன் டிஷ் போலோ அல் அகுயோ மற்றும் பாலஸ்தீன உணவான முஷாக்கன் ஆகியன இடம்பெற்றுள்ளன. ‘டேஸ்டி அட்லஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய சிக்கன் வகைகள் டாப் 10 பட்டியலில் 3 இடங்களை கைப்பற்றியதை சிக்கன் உணவு விரும்பிகள் தங்களது ருசியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

அக்டோபர் 1ல் இருந்து 10ம் தேதிக்குள் சென்னை பீச்-திருவண்ணாமலை, அரக்கோணம்-சேலம் மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு!

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது