சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் ஊராட்சியில் உலக ஓசோன் தினத்தையொட்டி 1,000 பனை விதைகள் நடும் பணி

*அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் ஊராட்சியில் உலக ஓசோன் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்கள் ஏரிக்கரையில் 1000 பனை விதைகளை நட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி முன்னிலை வகித்தார்.

பட்டதாரி ஆசிரியர் முரளி வரவேற்றார்.விழாவில் தமிழர்களின் தேசிய மரம் என கொண்டாடப்படும் பனை மரத்தை பாதுகாக்கும் வகையில் பனை மரங்களை வெட்ட அரசு தடை விதித்துள்ளது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மிகவும் பயனுள்ளது என்பதால் பனை மரங்களை அதிக அளவு வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் கோழிப்புலியூர் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் ஆயிரக்கணக்கான பனை விதைகளை நட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜெகராஜ், அலெக்சாண்டர், ஆனந்தி, விமலி, ரூபினி, மோகனா மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட
னர்.

Related posts

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600க்கு விற்பனை!!