செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி

புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தினர்.

தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- நிஜாத் அப்சோவ் இடையிலான ஆட்டம் 34-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2½-1½ என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை