சேரன்குளம் அமுதா வழக்கு; புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சென்னை: ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்ததாக சேரன்குளம் ஊராட்சி அதிமுக முன்னாள் தலைவி அமுதாவுக்கு எதிரான வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . புகாரை சிபிசிஐடிமுறையாக விசாரிக்கவில்லை என சிபிஐக்கு மாற்றக் கோரி ரோஸ்லின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அமுதா மற்றும் அவரது கணவருக்கு ஆதரவாக செயல்படுவதாக சிபிசிஐடிக்கு எதிராக ஏற்கனவே புகார் அளித்திருந்தோம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புதிய விசாரணை அதிகாரி யார்? என்பது குறித்து டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்