சென்னையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: சென்னையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர், தி.நகர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தை சேர்ந்த நரேஷ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாராக இவர் இருந்து வருகிறார்.

சட்ட விரோத பண பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் மேலும் பல இடங்களிலும் இந்த சோதனை விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கடந்த வாரம் பல்வேறு ஒப்பந்தரார்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தியாகராயநகர், திருவான்மியூர், மயிலாப்பூர், முகப்பேர், கொளத்தூர், அண்ணா நகர், அம்பத்தூர், உள்ளிட்ட12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

 

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்