சென்னை போலீஸ் கமிஷனர் அருணுடன் என்ஐஏ தென் மண்டல இயக்குநர் சந்திப்பு: முக்கிய வழக்குகளில் பரஸ்பரம் தகவல் பரிமாற்றம் செய்ய முடிவு

சென்னை: என்ஐஏ தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருணை, மரியாதை நிமித்தமாக நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பாதுகாப்பு சம்மந்தமான முக்கிய வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய ஏதுவாக இருதரப்பிலும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி மரியாதை நிமித்தமாக சென்னை போலீஸ் கமிஷனர் அருணை சந்தித்தார்.

அப்போது, சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இருவரும் கலந்துரையாடினர். இந்த உயர் மட்டக் கூட்டத்தில் பல்வேறு பிராந்திய பிரச்னைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். மேலும், இரு துறைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு சம்மந்தமான முக்கிய வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய ஏதுவாக இருதரப்பிலும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

Related posts

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு ரூ818 கோடிக்கு மது விற்பனை: கடந்த வருடத்தை விட அதிகம்

கர்நாடகாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு

முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை