சென்னை கமிஷனர் அருணுடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதி விஎஸ்எம் தலைமை அதிகாரி துணை ஜெனரல் ரவிகுமார் திங்ரா, நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அருணை காவல் ஆணையர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல் பொருட்களைக் கடத்துதல், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் ஒருங்கிணைப்பு மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு, நுண்ணறிவுத் தகவல்களைப் பகிர்வதில் ஒருங்கிணைப்பு, கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு, இயற்கைச் சீற்றம் மற்றும் இக்கட்டான நிலையின்போது மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகள் குறித்த தகவல்களைப் பகிர்தல் போன்ற பல்வேறு கடலோரப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினார். மேலும் குற்றத்தடுப்பு, சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துதலைத் தடுத்தல், கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் பொருட்டு, கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அடிக்கடி கலந்துரையாடல் செய்வதற்கு ஏதுவாக ஒரு நிரந்தர ஒருங்கிணைப்பு வழிமுறைகளை வகுப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு