சென்னை சென்ட்ரல் – நெல்லைக்கு சிறப்பு ரயில் இன்று இயக்கம்

நெல்லை: கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(எண்.06183) சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு நாளை(20ம் தேதி) சனிக்கிழமை காலை 11.20 மணிக்கு நெல்லை வந்து சேருகிறது.

மொத்தம் 18 பெட்டிகள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் இயக்கப்பட மாட்டாது என ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

சென்னையில் 4 இடங்களில் 1500 விநாயகர் சிலைகள் கரைப்பு: மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு!

30 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அழைத்து வர ஏற்பாடு!