சென்னை தீவுத்திடலில் 48 ஆவது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 48 ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போதும் தீவுத்திடலே மக்கள் கடலாகிற வகையில், நடைபெற்று வரும் இந்த பொருட்காட்சியின் சிறப்பை எடுத்துரைத்து உரையாற்றினார். மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, சிறப்பான முறையில் அரங்குகளை அமைத்திருந்த, சிறைத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் பொருட்காட்சிக்கு ஆயிரக்கணக்கில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து இருக்கும். டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, மணப்பாறை முறுக்கு, திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சுவையான மீன் வறுவல் போன்ற ருசியான உணவுகளை உண்டு மகிழலாம். நூடுல்ஸ், பிசா, பாஸ்தா, ஷவர்மா, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன் போன்ற உணவு வகைகளுக்கும் இங்கு ஸ்டால்கள் அமைக்கப்படும்.

அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி , 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, சென்னை தீவுத்திடலில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியை பார்வையிடலாம். வரும் 14-ம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியோருக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு குறைவானோர் பொருட்காட்சியை பார்க்க கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !