சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெளுத்தெடுக்கும் கனமழை: மக்கள் அவதி..!!

சென்னை: சென்னையில் நேற்று மிக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மெரினா, மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கனமழை பெய்கிறது. கீழ்பாக்கம், ஷெனாய் நகர், அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டில் மீண்டும் மழை:

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை கொட்டி தீர்க்கிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், ராட்டினங்கிணறு, மணிகூண்டு, திம்மாவரத்தில் மழை பெய்கிறது.

மாமல்லபுரத்தில் மிதமான மழை:

மாமல்லபுரம், பூஞ்சேரி, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

தாம்பரம் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை:

தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், வண்டலூர், சேலையூர், செம்பாக்கத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

செம்பரம்பாக்கம் நீர் திறப்பு 6,000 கனஅடியாக உயர்வு:

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. உபரிநீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியில் இருந்து 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மீனம்பாக்கத்தில் 26 செ.மீ. அதி கனமழை கொட்டியது:

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ. அதி கனமழை கொட்டித் தீர்த்தது.

Related posts

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்