சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கெளரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா வரும் 29ம் தேதி பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து, கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்று சட்டப் படிப்பை முடித்தவர்களும், இதுவரை பட்டமளிப்புக்கு பதிவு செய்தவர்களும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படுகிறது. தகுதியானவர்கள் பல்கலைக்கழக இணையதளமான http://www.tndalu.ac.in என்ற பக்கத்திற்கு சென்று வரும் 27ம் தேதிக்குள் பட்டமளிப்பு விழாவுக்கு பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.