சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்தில் 219 மாணவர்கள் சேர்க்கை

சென்னை: ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரும் 2024-25ம் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் தொடங்கப்பட்டது. அதன்படி 219 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை அவர்களுக்கான சேர்க்கை ஆணையை நேற்று வழங்கினார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை