சென்னை ரயிலில் ரூ.1.33 கோடி நகை பறிமுதல்

விழுப்புரம்: சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை விழுப்புரம் வந்து நின்றது. அந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணி ஒருவரிடம் சந்தேகத்தின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே அவரிடம் சோதனை நடத்தியபோது தங்க நகைகளும், ஏராளமான தங்க கட்டிகளும் இருந்தன. தொடர் விசாரணையில், அவர் விழுப்புரம் புது தெருவை சேர்ந்த வரதராஜன்(49) என்பதும் அவர் வைத்திருந்த நகை, தங்க கட்டிகள் 2 கிலோ இருக்கும் என்பதும், இதன் மதிப்பு ரூ.1.33 கோடி எனவும் தெரியவந்தது. ஆவணங்கள் இல்லாததால் நகை, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது