சென்னை போக்குவரத்து காவல்துறையின் நேரடி போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் நவீனமுறை

சென்னை: சென்னை போக்குவரத்து காவல் தற்போதுள்ள வளங்களில் முன்னேற்றத்தை நோக்கி நடவடிக்கை எடுப்பதிலும், போக்குவரத்தை சீர்செய்வதிலும் அதை அமல்படுத்துவதிலும் மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் திறமையான செயல்பாட்டிற்கான நவீன தொழில்நுட்ப முன் முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது.

இந்த முன் முயற்சிக்கான அடுத்தபடியாக, சென்னை போக்குவரத்து காவல்துறை Mandark Technologies PvtLtd மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ரூ. 1,00,01,000. செலவில் “நேரடி போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் நவீனமுறை” (Live Traffic Monitor) என்ற செயல்பாட்டினை உருவாக்கியுள்ளது. இந்த செயல்பாடானது நகரத்தில் 300 சந்திப்புகளில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த போக்குவரத்து கண்காணிப்பானது ஒரு நவீன அமைப்பு/பயன்பாடு அல்லது சேவையாகும். இது சாலை வழிகளில் தற்போதைய போக்குவரத்து நிலைமைகள் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்குகிறது. இந்த செயல்பாடானது போக்குவரத்து நெரிசல்கள், சம்பவங்கள் மற்றும் பயண நேரங்கள் குறித்த தகவலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த உதவுகிறது. இந்த அமைப்பு நிகழ் நேர நிகழ்வுகளை 100% துல்லியமாக கண்காணித்து, நகரத்தில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் போக்குவரத்தைப் பற்றிய தகவலையும் வழங்குகிறது.

நேரடி போக்குவரத்து கண்காணிப்பின் (Live Traffic Monitor) முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

i. இந்தப் பயன்பாடானது ஒரே நேரத்தில் Rkhh; 1,000 சாலைகளை உள்ளடக்கிய 300 சந்திப்புகளிலிருந்து போக்குவரத்து ஓட்டம், வேகம் மற்றும் சம்பவங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து கூகுள் மேப்பின் கட்டணச் சேவையிலிருந்து தகவலைச் சேகரித்து வழங்கி வருகிறது.

ii பலவிதமான வழிகாட்டும் முறைகள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் நேரடி போக்குவரத்து கண்காணிக்கும் அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இது சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் வழிச்செல்லும் போக்குவரத்தின் நேரடியாக போக்குவரத்து தகவலைப் பார்க்கவும், ஒரு வழிப்பாதை மாற்றத்தின் நிகழ்நேர தகவலைப் பெறவும் உதவிபுரிந்து வருகிறது.

iii. நேரடி போக்குவரத்து கண்காணிப்பானது போக்குவரத்தின் நிலையை காட்சிப்படுத்துவதில் முதல்நிலைக் கொண்டுள்ளது. வண்ணவரைபடங்கள் மூலமாக (போக்குவரத்து அடர்த்தி மற்றும் தடைகளின் விவரங்கள்) போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி, மிதமான போக்குவரத்து, போன்ற தகவல்களை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தவும், ஒரு குறிப்பிட்டசாலையின் பகுதிகளில் போக்குவரத்தின் நேரடி நிலையையும், முந்தைய நிலையையும் அறியவும் உதவுகிறது.

iv. நேரடி போக்குவரத்து கண்காணிப்பானது தொடர்ந்து போக்குவரத்து தகவல்களை அவ்வப்போது தெரியப்படுத்தி கொண்டிருக்கும், இதனால் போக்குவரத்து காவல் துறையினர் சாலைகளின் சமீபத்திய நிலையை அறிய முடியும். மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் உதவுகிறது.

v. நேரடி போக்குவரத்து கண்காணிப்புமூலம் போக்குவரத்து காவல்துறையினர் சாலைகளில் நடக்கும் விபத்துகள், தடைகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து உடனடியாக தகவல்களை பறிமாற்றம் செய்ய முடிகிறது, இந்த தகவலினால் போக்குவரத்தின் துல்லியமான மற்றும் முழுமையான நிலையை அறிய முடியும்.

போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடித்திருக்கும் சூழ்நிலைகளில், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை அறிவிப்பு அளிக்கப்படும். போக்குவரத்து நெரிசலுக்கான காலஅளவு நேரத்தை சென்னை பெருநகர போக்குவரத்து அதிகாரிகளால் களநிலவரப்படி சரி செய்ய முடியும்.

எதிர்காலத்தில், சமூகஊடகங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல்கள் குறித்து, சாலை பயனாளர்களுக்கு தெரியப்படுத்த இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று (19.06.2023) வேப்பேரியிலுள்ள, காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மேற்படி “நேரடி போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் நவீனமுறை” (Live Traffic Monitor) திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி. சரத்கர், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர், திரு.N.M.மயில்வாகனன், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்கள் P.சரவணன், திரு. சக்திவேல், சமய்சிங் மீனா, M.ராதாகிருஷ்ணன், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

`சார் போகவேண்டாம், ப்ளீஸ்…’ பணிமாறுதலான ஆசிரியரின் கால்களை பிடித்து கதறிய மாணவிகள்: அரசு பள்ளியில் உருக்கம்