சென்னையில் இன்று துணைவேந்தர்கள் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலையின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடக்கும்கூட்டத்தில் உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திக் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதில் பல்கலைக் கழகங்கள், அவற்றுடன் இணைந்த கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை, குறிப்பிட்ட பாடத்திட்டத்தை சேர்ப்பது, பொது பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் தற்போதைய நிலை குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்வதுடன், முன்னாள் முதல்வர் கலைஞர் நாற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்தும் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை